E-TECH கல்விப் பயணத்தின் 3 ஆண்டுகள் – வரலாற்றுச் சாதனையும் அர்ப்பணிப்பிற்கான பாராட்டும்
2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட E-TECH பிரிவின் கல்விப் பயணம் இன்று மூன்று ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இப்பிரிவின் முதல் மாணவர் தொகுதி 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் முதன்முறையாக தோன்றி சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளது. குறிப்பாக SFT மற்றும் E-TECH பாடங்களில் 100% சித்தியையும், ICT பாடத்தில் 40% சித்தியையும் பெற்று இப்பிரிவு தனது முதல் கல்விப் பயணத்திலேயே சிறப்பான சாதனையை நிலைநாட்டியுள்ளது.
இந்த வரலாற்றுச் சாதனையின் பின்னணியில் E-TECH Project Development Committee உறுப்பினர்களின் அர்ப்பணிப்பும் அயராத உழைப்பும் முக்கிய பங்காற்றியுள்ளது. மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மேலதிக வகுப்புகள், விசேட கருத்தரங்குகள் மற்றும் செய்முறைப் பயிற்சி வகுப்புகள் உள்ளிட்ட பல்வேறு கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதி மற்றும் வளங்களை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் ரூ. 76,900/- செலவிடப்பட்டதுடன், இவ்வாண்டும் இந்த கல்விச் சேவை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவது மிகவும் பாராட்டத்தக்கதாகும்.
பாடசாலையின் முன்னேற்றத்திற்காக தங்களது நேரம், பொருளாதார உதவி மற்றும் உடலுழைப்பை தன்னலமின்றி வழங்கி வரும் E-TECH Project Development Committee உறுப்பினர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் இந்த உயர்ந்த சேவை மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கும் பாடசாலையின் கல்வி முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக அமைந்துள்ளது.
இந்த முயற்சிக்கு ஆதரவளித்த அல்ஹாஜ் எம். முழவ்பர், அல்ஹாஜ் ஏ. எல். எம். ஹலீம், ஜனாப் எஸ். ஷரீப்தீன், ஜனாப் ஏ. எஸ். எம். ரிஸ்வான், ஜனாப் எம்.எச்.எம். முஹ்ஸின், ஜனாப் ஆர்.எம். ரிஸ்வான், ஜனாப் எஸ்.டீ. பாஹிம் ஆசிரியர், அஷ்ஷேய்க் எம்.எஸ்.எம். இம்ரான் மற்றும் ஜனாப் எம். எஸ். எம். ரஷீத் ஆகிய அனைவருக்கும் எங்களது விசேட நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வல்ல அல்லாஹ் அவர்கள் அனைவருக்கும் ஆரோக்கியம், செல்வ வளம், குடும்ப நலன் மற்றும் பரக்கத் ஆகியவற்றை வழங்கி அவர்களது நற்செயல்களை ஏற்றுக் கொள்வானாக. ஆமீன்.